சீகிரியாவில் குளவித் தாக்குதலில் 40 பேர் காயம் : 18 பேர் மருத்துவமனையில்!!

588

Sigriya

சீகிரியாவில் குளவித் தாக்குதல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க சீகிரியா மலைக்குன்றுக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.

அதே போன்று சீகிரியா மலைக்குன்றில் கூடு கட்டி வாழும் குளவிகளும் அடிக்கடி சுற்றுலாப் பயணிகளை கொட்டி வருவதால், சீகிரியா பிரதேசத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை இடைநிறுத்தப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று குளவித் தாக்குதல் காரணமாக சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 18 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குளவித்தாக்குதல் சம்பவம் சீகிரிய மலை அடிவாரத்தில் உள்ள சிங்கப் பாதம் நுழைவு வாயில் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இதற்கிடையே குளவித் தாக்குதல் காரணமாக மலை உச்சியில் சிக்கியிருந்தவர்களை விசேட மீட்பு நடவடிக்கை மூலம் கீழே அழைத்துவரவும் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.