யாழில் தமிழ் மன்னர்கள் மூவரின் உருவச் சிலைகள் திறப்பு!!

1339

யாழ். மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்தில் தமிழ் மன்னர்கள் மூவரினது சிலைகள் இன்று மாலை 4 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எல்லாளன், பண்டாரவன்னியன், பரராஜசேகரன் ஆகிய மூன்று மன்னர்களினது சிலைகளும் அமைச்சர் டக்ளஸினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானதேசீக பரமாச்சாரிய சுவாமிகள், வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, யாழ்.மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5