திருமணத்திற்கு மறுத்த காதலி : கழுத்தை நெரித்து கொலை செய்து கால்வாயில் வீசிய காதலன்!!

64

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் வசித்து வந்தவர் ருச்சிகா. 25 வயதான இவர் திருமணம் செய்ய மறுத்ததற்காக தனது காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலையை அவரது காதலன் சிவம் மற்றும் அவரது பெற்றோரும் நேரடியாக ஈடுபட்டிருந்தனர். போலீசார் 12 நாட்களில் வழக்கை தீர்த்து வைத்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அழகு நிலையத்துக்குச் சென்று திரும்பாத ருச்சிகாவை தேடி களைத்த அவரது தந்தை தேவ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ராம்கங்கா ஃபீடர் சேனல் கால்வாயில் ஒரு பையில் சடலமாக ருச்சிகா மீட்கப்பட்டார்.



பிரேத பரிசோதனை அறிக்கைப்படி சுமார் 6-7 நாட்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

விசாரணையில், சிவம் தனது காதலியான ருச்சிகாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதையும், ஆனால் ருச்சிகா அவரை “முதலில் அரசு வேலையில் சேருங்கள், பிறகு திருமணம்” என மறுத்ததையும் ஒப்புக்கொண்டார்.

தொடர் வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த சிவம் கோபத்தில் தாவணியைப் பயன்படுத்தி அவரை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், உடலை பெற்றோருடன் சேர்ந்து ஒரு பையில் அடைத்து ராம்கங்கா கால்வாயில் வீசிவிட்டதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ருச்சிகாவின் செருப்புகள் மற்றும் கொலையில் பயன்படுத்தப்பட்ட பையையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். பிஜ்னோர் கிழக்கு பகுதி எஸ்.பி அமித் கிஷோர் ஸ்ரீவஸ்தவா , “இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.

திருமணத்திற்கு வற்புறுத்தப்பட்டாலும், ருச்சிகா அரசு வேலை கிடைக்கும்வரை திருமணத்தை தள்ளிப்போட விரும்பியதால், கொடூரமாக இந்த செயல் தொடர்ந்தது.மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

அவர்கள் மீது IPC பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.