
திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியில் அம்பலாந்தோட்டை லுணம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை (23.07) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





