இன்று முதல் வடக்கு புகையிரத வழிகள் நிறுத்தம்!!

369

புனரமைப்புப் பணிகளுக்காக வடக்கு புகையிரத மார்க்கத்தின் பல இடங்களை தற்காலிகமாக இன்று திங்கட்கிழமை (19) முதல் மூடப்படவுள்ளது.

மஹவ – அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை தற்காலிகமாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மஹவ – ஓமந்தை வரையிலான புகையிரத பாதை முற்றாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மதவாச்சி – தலைமன்னார் புகையிரத பாதையின் அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படும்.

மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து புகையிரத பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைக்கும் பணிகளை இவற்றுக்கு இணையாக முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் புகையிரத பாதை புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, வடக்கு – தெற்கு போக்குவரத்தை வழமை போன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாளை முதல் ‘புலதிசி கடுகதி புகையிரதம்’ மற்றும் ‘உதயதேவி’ புகையிரத சேவையில் ஈடுபடவுள்ளதுடன், திருகோணமலை வரையான ‘இரவு தபால் புகையிரத’ சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை இன்று முதல் அநுராதபுரம் – காங்கேசன்துறை வரையும், எதிர்வரும், 27 ஆம் திகதி முதல் ஓமந்தை – காங்கேசன்துறை வரையும் ‘யாழ் ராணி’ புகையிரத சேவையில் ஈடுபடவுள்ளது.