கணவன் வீட்டுச் செலவுக்கு பணம் தராததால் இரு மகள்களுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!

45

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் கிருஷ்ணா நகரில் தாய் ஒருவர் தனது 2 மகள்களை கொன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் வேலை பார்த்து வரும் சிவசங்கரின் மனைவி பத்மா (32) இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு தேஜாஸ்ரீ (7), லாஸ்யா (5) என்ற 2 மகள்கள் இருந்தனர்.

காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகள் தனியாக வாழ்ந்து வந்தனர்.

கணவர் சரியாக வேலைக்கு செல்லாமல், வீட்டு செலவுக்கு பணம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த பத்மா, தனது 2 மகள்களையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரவு வீட்டிற்கு வந்த சிவசங்கர் சம்பவத்தை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், பத்மா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.