கடத்தப்பட்ட 2 வயதுக் குழந்தை 20 நிமிடத்தில் மீட்க்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு!!

21

குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பவரின் 2 வயது மகன் கபிலேஷ் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடை முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கூல்டிரிங் குடிக்க வந்த தம்பதி ஒருவர் கொஞ்சியபடி தூக்கிச் சென்றனர்.

பின்னர் திடீரென பைக்கில் குழந்தையுடன் புறப்பட்டனர். அதிர்ச்சியடைந்த தாய் முத்துச்செல்வி போலீசில் புகார் அளித்தார்.

விரைந்து செயல்பட்ட குலசேகரப்பட்டினம் காவல்நிலைய போலீசார்,காரைக்கால் அம்மையார் கோவில் அருகே பைக்கை நிறுத்தி குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த தம்பதியை மடக்கினர்.

விசாரணையில் அவர்கள் சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த லிங்கதுரை (35), ஜெயந்தி (33) என்பதும் தெரியவந்தது.

திருமணமாகி 11 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் இச்செயலில் ஈடுபட்டது வெளிச்சம் பார்த்தது. 20 நிமிடங்களிலேயே குழந்தையை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.