
வவுனியா ஈரற்பெரியகுளம் மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப்பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிசாருக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அந்தபகுதிக்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சுமார் 40-45 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர். அவரது உடலில் சிறுபகுதி தீயினால் எரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





