வாகனம் ஒன்று மின் கம்பத்தில் மோதி விபத்து!!

30

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று (27) அதிகாலை பாரிய விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் வட்டாரக வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி இதன்போது எதுவித ஆபத்துக்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளார்.

காத்தான்குடி பகுதியிலிருந்து மருதமுனை நோக்கிச் சென்று கொண்டிருந்த வட்டா ரக வாகனமே தேற்றாத்தீவு கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாலிருந்து மின் கம்பத்தில் மோதுண்டு விபத்துள்குள்ளாகியுள்ளது.

வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மின்கம்பமும் உடைந்து வீழ்ந்துள்ளது. மேலும் விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.