ஆறு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுவன் : பாபநாசம் திரைப்பட பாணியில் ஒரு கொலை!!

25

இந்தியாவின் ராஜஸ்தானில், ஆறு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுவன் ஒருவனை அவனது உறவினர்களே பாபநாசம் திரைப்பட பாணியில் கொன்று புதைத்துவிட்டது தெரியவந்துள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த ஜக்மோகன் பைரவா என்னும் நபரின் மகன் டில்லு என்னும் பிரின்ஸ். பிரின்ஸ் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் காணாமல் போனான்.

ஆறு ஆண்டுகளாக பொலிசார் அவனைத் தேடிவந்தும் சிறுவன் கிடைக்காததால், எப்படியாவது அவனைக் கண்டுபிடிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், பிரின்ஸின் உறவினர்களான அனில் மற்றும் கிருஷ்னா தம்பதியர் சிறுவனைக் கொன்று புதைத்தது தெரியவந்துள்ளது.

2020ஆம் ஆண்டு, ராஜஸ்தான் வழியாக டெல்லி மும்பை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது, குழந்தையைக் கொன்று சாலை அமைக்கும் இடத்தில் புதைத்துவிட்டதாக அனில், கிருஷ்னா தம்பதியர் தற்போது தெரிவித்துள்ளனர்.

ஆகவே, நெடுஞ்சாலையின் ஓரமாக, பூமிக்கடியில் ஸ்கேன் செய்யும் இயந்திரங்கள் மற்றும் ஜேசிபி வாகனங்களின் உதவியுடன் பிரின்ஸின் உடலைத் தேடும் பணி துவக்கப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், குழந்தை காணாமல்போன அன்று அனில் கிருஷ்னா தம்பதியரும் கவலையுடன் குழந்தையைத் தேடினார்களாம்.

பிரின்ஸுடைய அக்காவான அர்ச்சனாவும் அண்ணனான சமரும் அதை நினைவுகூர்ந்துள்ளதுடன், அவர்கள் இப்படி செய்திருப்பார்கள் என தாங்கள் நினைக்கவேயில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்கள்.