வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பில் செயலமர்வு!!

53

வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிசாரின் ஏற்பாட்டில் வீதி போக்குவரத்து விதிமுறை தொடர்பான பயிற்சிப் பட்டறை நிகழ்வு வவுனியா நகரில் இடம்பெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் வீதி விதிமுறைகளை பின்பற்ற பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீதி ஒழுங்கு கண்காணிப்பு மாணவர்களுக்கே இப் பயிற்சிகள் வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பட்டறையும் வீதி ஒழுங்கு முறை பற்றிய விளக்கமளிப்பும் இடம்பெற்றது. முன்னதாக வீதிக்குறியீடுகள், சமிக்ஞைகள், போக்குவரத்து விதிகள் தொடர்பாக விளக்கமளிப்பு செயலமர்வும் அதனைத் தொடர்ந்து வவுனியா நகர கண்டி வீதியில் விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் காண்பிக்கப்பட்டது.

இதில் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொலிஸாருடன் தெரிவு செய்யப்பட்ட வீதி ஒழுங்கு கண்காணிப்பு மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.