
வவுனியா மன்னார் வீதி பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (10.03.2026) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியின் மறுபக்கம் திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பயணித்த மற்றுமொரு அதிவேக திறன்கொண்ட மோட்டார் சைக்கிள் குறித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






