குழந்தை இல்லை : கணவன்–மனைவி இருவரும் விபரீத முடிவு!!

27

சேலம் மாவட்டத்தில் மேச்சேரி பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி சுசீலா. தம்பதியர் இருவரும் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேச்சேரி ஓமலூரான் தெருவை சேர்ந்த முருகன் மற்றும் அவரது மனைவி சுசீலா இருவரும் வீட்டிலேயே பட்டு நெசவு தொழில் செய்து வந்தனர்.

திருமணம் ஆனது 30 ஆண்டுகளுக்கும் மேலாகியும் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் இருவரும் நீண்ட நாட்களாக மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.