கிணற்றில் குதித்த மனைவி : காப்பாற்றச் சென்ற கணவனும் உயிரிழப்பு!!

31

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி பரதன் என்பவர், அந்த பகுதியில் விவசாயம் பார்த்துக் கொண்டே பால் வியாபாரமும் செய்து வந்தார்.

இவருடைய மனைவி ராஜகுமாரி. இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவிக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த ராஜகுமாரி, வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென தான் தற்கொலைச் செய்துக் கொள்ளப் போவதாக ஆவேசமாக கூறிவிட்டு,

வீட்டின் பின்புறம் உள்ள விவசாயக் கிணற்றை நோக்கி ஓடினார். அவரைத் தடுக்க சக்தி பரதன் ராஜகுமரியின் பின்னாலேயே ஓடிச் சென்று சமாதானப்படுத்த முயற்சி செய்தார்.

ஆனால் அதற்குள் ராஜகுமாரி கிணற்றில் குதித்து விட்டு உயிருக்கு போராடிய படியே தத்தளித்தார். மனைவியை காப்பாற்றுவதற்காக சக்திபரதனும் துணிச்சலாக கிணற்றில் குதித்தார்.

ஆனால் சக்தி பரதனுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சில நிமிடங்களில் ராஜகுமாரியும் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு,

விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் இரு குழந்தைகளும் ஒரே நாளில் தாய், தந்தையை இழந்து நின்றது அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.