
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (16.04.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4830.68 டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை வெள்ளி ஒரு அவுண்ஸ் 79.85 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 402000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 369900 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் மற்றும் உலகப் பொருளாதாரக் காரணிகள் தொடரும் பட்சத்தில், வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மேலும் தளம்பல் நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.





