தங்கம் வாங்க காத்திருப்போருக்கான செய்தி – இன்று பதிவாகியுள்ள நிலவரம்!!

256

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (21.04.2026) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை நேற்று 4,763 ஆக பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், இன்று ஒரு அவுண்ஸ் தங்கம் 4,806 அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு செட்டியார் தெருவின் தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை நான்கு இலட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 368000 ரூபாவாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.