கனமழையில் மின்னல் தாக்கி தம்பதியினர் பரிதாபமாக பலி!!

16

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு திடீரென இடி, மின்னலுடன் கூடிய பலத்த கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்தத் தொடர் மழையின் காரணமாக அப்பகுதியின் முக்கியச் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கு பெய்த கனமழையின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் தம்பதியினர் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விபரீத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோபிசெட்டிபாளையம் மூப்பன்சாலைப் பகுதியில் இடி முழக்கத்துடன் மழை பெய்து கொண்டிருந்த போது, அங்குள்ள ஒரு இறைச்சி கடையின் மீது திடீரென மிக பயங்கரமாக மின்னல் தாக்கியுள்ளது.

அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாக அந்த இறைச்சி கடையின் உள்ளே சுரேஷ் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகிய இருவரும் இருந்துள்ளனர்.

இடியின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், கடைக்குள் இருந்த தம்பதியினர் இருவரும் அந்த தாக்கின் வீரியம் தாங்க முடியாமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருமே தாக்கி சம்பவ இடத்திலேயே பலியான இக்கோரச் சம்பவம் கோபிசெட்டிபாளையம் பகுதி மக்களிடையே அதிரச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த தம்பதியினரின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இரவு நேரத்தில் இடியுடன் மழை பெய்யும் போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.