தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட ஒபாமா அழைப்பு!!

691

Obama

ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக போரிட அரபு நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் தலைமையிலான கூட்டு நாடுகள் இணைந்து சிரியா மீது முதன்முறையாக நேற்று தாக்குதல் நடத்தியது.
இதில், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் மற்றும் அதன் உறுப்பினர்கள் என பலர் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் கடந்த 3 வருடங்களாக நடந்து வரும் உள்நாட்டு போருடன் தீவிரவாதிகளுக்கு எதிரான புதிய முன்னணியை இந்த கூட்டணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அவர் பேசியதாவது, ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போரானது அமெரிக்கா மட்டும் தனியாக போரிடுவது என்பதல்ல, அது உலக நாடுகள் நடத்தும் போர்.

நமது மக்களை மிரட்டும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் என்பதை நம்மால் தாங்கி கொள்ள முடியாது என்றும் தீவிரவாதத்திற்கு எதிராக போரிட அரபு நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் பேசியுள்ளார்.