பாகிஸ்தானில் 25 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து : 40 பேர் உயிரிழப்பு!!

9

பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்ததில் 40 பேர் உயிரிழந்ததாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் உள்ள குவெட்டாவிலிருந்து பெஷாவருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து சுமார் 25 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கிற்குள் விழுந்துள்ளது.

மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதுடன், மலைப்பகுதி என்பதால் மீட்புப் பணியின் ஆரம்பக்கட்டத்தில் கடும் சிரமங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.