
வவுனியா தாஸ்கோட்டம் குழந்தை இயேசு முன்பள்ளியின் “மழலைகள் மகிழ்களம் – 2026” சிறுவர் விளையாட்டு விழா குழந்தை இயேசு ஆலய முற்றத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

வேப்பங்குளம் பங்குத்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வவுனியா முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் கீர்த்தநாயகி கலந்து கொண்டதுடன்,

சிறப்பு விருந்தினர்களாக வீ.பரஞ்சோதி (ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் – வவுனியா தெற்கு), கௌசல்யா லெனின் (கிராம சேவையாளர் – நெருக்குளம்) , ஜெயராணி (இந்து அன்பகம் – வேப்பங்குளம்), தனஞ்சேயன் (ஸ்தாபகர் – வெண்புறா அமைப்பு),

பிரதீபன் (ஸ்தாபகர் – வன்னிப்பட்டறை), கதீஷன் (ஊடகவியலாளர்), பொது முகாமையாளர் (வ/ ப. தெ. வ. அ. கூட்டுறவு சங்கம்), நிர்மலா (ஒருங்கிணைப்பாளர் – பூவரசன்குளம் கட்டமைப்பு) மற்றும் பொதுமக்கள் , பெற்றோர்கள் , மாணவர்கள் , சமூக அமைக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முன்பள்ளி சமூகத்தினரால் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சிறுவர் விளையாட்டு விழாவில், மழலைச் செல்வங்களின் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உற்சாகமான நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சிறார்களை உற்சாகப்படுத்தினர்.








