குடும்பமொன்றில் 101 ஆண்டுகளுக்கு பின் பிறந்த முதல் பெண் குழந்தை!!

635

பிரித்தானியாவில் வசிக்கும் குடும்பமொன்றில் 101 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் தடவையாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

பிரித்தானியாவின் டிவெர்டன் (Tiverton) மாகாணத்தை சேர்ந்த சில்வெர்டன் (Silverton) என்ற நபரின் குடும்பத்தில், கடந்த 1913ம் ஆண்டிலிருந்து ஆண் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர்.

இவ்வாறு 4 தலைமுறைகளாக ஆண் வாரிசை மட்டுமே பார்த்த இந்த குடும்பத்திற்கு, தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது, குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த குடும்பத்தை சேர்ந்த ஜெரேமி சில்வெர்டன்- டானியலே அன்ட்ரூஸ் என்ற தம்பதியினருக்கு பிறந்த இப்பெண் குழந்தைக்கு பொப்பி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலும் ஆண் குழந்தையை மட்டுமே பெற்ற இந்த வம்சத்தில் பெண் குழந்தையொன்று முதல் தடவையாக பிறப்பது 10,000 பிறப்புகளுக்கு ஒரு பிறப்பு என்ற வீதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வு என கூறப்படுகிறது.

B1 B2 B3 B4