இலங்கையில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!!

20

இலங்கையில் வெப்பத்துடன் வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அந்த வகையில் நாட்டில் வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் நான்கு மாதங்களாக தொடர்ந்து நிலவிய கடுமையான வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மொனராகலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நேற்றைய தினம் (10.09.2026) பிற்பகல் மிதமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்த மழையின் காரணமாக அப்பகுதியில் நிலவிய வெப்பமான சூழல் தணிந்துள்ளதுடன், குடிநீர் தேவைகளும் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல்,

மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும் நாட்டின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 135,037 பேர் குடிநீர் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.