திருட வந்த வீட்டில் அசந்து உறங்கிய திருடன் : காலையில் காத்திருந்த டிவிஸ்ட் : இலங்கையில் சம்பவம்!!

29

மொனராகல ரத்தனபிட்டிய வீடு ஒன்றுக்குள் நுழைந்த இந்தத் திருடன் அசதியில் அங்கேயே நித்திரை கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த அங்கிருந்த கட்டிலில் அயர்ந்து தூங்கியுள்ளான் அடுத்த நாள் வீட்டார் காலையில் எழுந்து பார்த்த போது அறிமுகம் இல்லாதஒரு மனிதன் நமது வீட்டு கட்டிலில் உறங்குவதை கண்டு அச்சமடைத்தனர். உடனடியாக சுதாரித்த வீட்டினர் அயலவர்களையும் போலீசாரையும் அழைத்து திருடனை பிடித்து கொடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் வீட்டாரின்கதவு உடைக்கப்பட்டதால் சுமார் 10,000 ரூபா நஷ்டம் ஏற்பட்டுஉள்ளதாகவும் இவரால் எந்தபொருளும் திருடப்படவில்லைஎனவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கைதான திருடன் தனக்கு தற்செயலாக நித்திரை வந்ததாக இவர் போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கிய நிலையில், பொலிஸார் திருடனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.