
யாழ்ப்பாணம் – கேரதீவு, சங்குப்பிட்டி பாலப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மன்னாரைச் சேர்ந்த ஆர்னோல்ட் அன்ரனி (வயது 31) என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.





