
திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று(29.09.2026) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த கார், சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் இறக்கக்கண்டி, வாளையூற்று பகுதியைச் சேர்ந்த 29 வயதான என். நிஜாம் உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி, ஐந்து வயது மகன் மற்றும் 19 வயது சகோதரர் ஆகியோர் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





