வாழைக்குலைகளுடன் வந்த நாகபாம்பு : பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி!!

84

வாழைக்குலைகளை ஹட்டனுக்கு ஏற்றி வரப்பட்ட லொறி ஒன்றில் நாகபாம்பு தென்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழைக்குலைகளுடன் வந்த லொறியில் பாம்பு இருப்பதை அவதானித்த வர்த்தகர்களும் பொதுமக்களும் அச்சமடைந்தனர். கடந்த சில நாட்களாக ஹட்டன் நகரப் பகுதிகளில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் நடமாடும் வர்த்தகப் பகுதிகளில் கட்டுவிரியன் மற்றும் நாகபாம்புகள் தென்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, நகரப் பகுதிகளில் பாம்புகள் நடமாடுவதற்கான காரணங்கள் குறித்து உரிய அதிகாரிகள் உடனடியாகக் கவனம் செலுத்துவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாரும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.