1600 சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்த சொகுசுக் கப்பல்!!

6

கொழும்பு துறைமுகத்தை 1,600 சுற்றுலாப் பயணிகளுடன் Cordelia Empress என்ற சொகுசு சுற்றுலாக் கப்பல் வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பலில் 588 பணியாளர்களும் வருகை தந்துள்ள நிலையில், பயணிகளில் சுமார் 90 சதவீதமானோர் இந்தியப் பிரஜைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் வருகை தந்தவர்களில் சுமார் 1,800 பேர் கொழும்பு, பின்னவலை யானைகள் சரணாலயம் மற்றும் காலி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடச் சென்றுள்ளனர். 210 மீற்றர் நீளம், 11 தளங்கள் மற்றும் 796 பயணிகள் அறைகளைக் கொண்ட இந்தச் சொகுசுக் கப்பல், 2026–2027 சுற்றுலாப் பருவத்தில் மேலும் மூன்று தடவைகள் கொழும்புக்கு வருகை தரவுள்ளது.

அதன்படி, டிசம்பர் 17, 24 மற்றும் 31ஆம் திகதிகளில் இந்தக் கப்பல் மீண்டும் கொழும்பை வந்தடையவுள்ளது. சொகுசுக் கப்பல்களின் வருகை அதிகரிப்பதன் மூலம் இலங்கையின் அந்நியச் செலாவணி வருமானம் உயர்வதுடன், சுற்றுலாத்துறை வளர்ச்சியடைவதற்கும் உள்ளூர் வர்த்தகர்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் உருவாகுவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.