சுட்டுக் கொல்லப்பட்ட நபர் வீடியோவில் தோன்றினார் : அதிர்ச்சியில் இராணுவம்!!

549

Abu

நைஜீரிய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட போகோ ஹரம் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபூ பெக்கர் தோன்றும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நைஜீரிய இராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போகோ ஹரம் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபூ பெக்கர் (Abu bakr) நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவன் பேசியதாவது, நான் உயிரோடுதான் இருக்கிறேன். அல்லா எனது உயிரை எடுக்கும் வரை, நான் உயிரோடுதான் இருப்பேன். நீங்கள் என்னை கொன்றாலும், எங்கள் பகுதியில் இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வருவதை தடுத்து நிறுத்த முடியாது.

எங்கள் இஸ்லாமிய தேசத்தில் தங்கியிருந்து, குரானை போதித்து வருகிறேன் என பேசியுள்ளான். தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ நைஜீரிய இராணுவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.