யாழில் வாளினால் வெட்டி கொலை செய்த நபர் கைது!!

637

Knif

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் நபர் ஒருவரை வாளினால் வெட்டி கொலை செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

வாய்த்தர்க்கமே குறித்த கொலைக்கு காரணம் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.