கச்சதீவு உற்சவத்துக்காக கடமைக்குச் சென்ற பொலிஸார் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழப்பு!!

577

Body

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற உற்சவத்தில் கடமை புரிந்து விட்டு படகில் திரும்பிக் கொண்டிருந்த பொலிஸார் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

பருத்தித்துறைப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சேனாதீர (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். குருநாகலைச் சேர்ந்த இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.