க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்ப இறுதித் திகதி மார்ச் 6!!

614

AL

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் 6 என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரத்தில் கணித பாடத்தில் சித்திபெறாது உயர்தரத்திற்குத் தோற்றியுள்ள மாணவர்களும் விண்ணப்பங்களை அனுப்ப முடியும். அதற்கமைய க.பொ.த உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு கணித பாடம் சித்திபெற வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

க.பொ.த உயர் தரத்தில் தோற்றுவதற்கு கணித பாட சித்தி கட்டாயமில்லை என்றாலும், தொழில் வாய்ப்பு, தொழிற்பயிற்சிகள், ஏனைய கற்கை நெறிகளை கற்பதற்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ கணித பாடம் அவசியம் என்று கோரப்படும் பட்சத்தில் கணிதம் பாட சித்தி அவசியம் என்றும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.