பெண்களுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியவர் கைது!!

872

SMS

பெண்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு ஆபாச குறுத்தகவல்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கடுபொத – நெலும்கணுவ பிரதேசத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே, இவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர் வசமிருந்து, இவ்வாறு குறுந்தகவல்களை அனுப்ப பயன்படுத்தப்பட்ட மூன்று கையடக்கத் தொலைபேசிகள், சிம்கள் நான்கு மற்றும் பிரிதொரு நபரின் தேசிய அடையாள அட்டையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவரை கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.