உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு!!

1057

AL

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 31ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் பெப்ரவரி 6ம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. முன்னதாக மார்ச் 6ம் திகதியுடன் (இன்றுடன்) விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தது.

எனினும் இந்தக் கால எல்லை எதிர்வரும் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.