வவுனியா அரச அதிபருக்கு எதிராக வடமாகாண சபையில் பிரேரணை!!

727

north provincel

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை அவமதித்தமை தொடர்பில் வவுனியா மாவட்ட அரச அதிபருக்கு எதிராக பிரேரணை ஒன்று சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தினால் சபையில் கொண்டுவரப்பட்டு ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டுத்திட்டத்தில் முறைகேடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் வவுனியா சிதம்பரபுரம் மக்கள் கடந்த 2ம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்ததுடன் அரச அதிபரிடம் மகஜர் ஒன்றினை வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த மக்களை மாவட்ட செயலகத்திற்கு உள்ளே சென்று மகஜரை வழங்க பொலிசாரால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் குழப்பமடைந்திருந்தனர்.

அதற்கமைய மக்களுடன் கலந்துரையாடிய உறுப்பினர் ஐவருடன் ஒருவராக அரச அதிபரின் அறைக்குச் சென்றனர். அதன்போது இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்தது நீங்களா என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்கு உறுப்பினர் இல்லை என தெளிவாக பதிலளித்திருந்தார். அவ்வாறு என்றால் வெளியில் போகலாம் என்றும் தான் மக்களுடன் பேசுவதாகவும் தெரிவித்து உறுப்பினரை அரச அதிபர் வெளியில் அனுப்பியிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து அரச அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண சபை ஜனாதிபதியிடம் கோர வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டது.

சபையில் குறித்த பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு முதலமைச்சர் இது குறித்து ஜனாதிபதியிடம் கோருவதுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என சபையில் அறிவிக்கப்பட்டது.

-IBC தமிழ்-