வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராகப் போராட்டம்!!

804

vavuniya

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக பிரதேச சபை வளாகத்தின் பிரதான வாயிலை பூட்டி சபை உறுப்பினர்கள் ஏழு பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (17.03) காலை இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதனால் ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகளை துரிதமாக நடைமுறைப்படுத்த பிரதேச சபைத் தவிசாளர் ஒத்துழைப்பு வழங்க வில்லை எனவும், தன்னிச்சையாக செயற்பட்டுவருகிறார் என்றும் தெரிவித்தே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் பிரதேச சபை தவிசாளர் க.சிவலிங்கத்திடம் கேட்ட போது, தனக்கு இது தொடர்பில் எதுவும் அறியத்தரவில்லை எனவும் தாம் முழுமையாக அபிவிருத்தி பணிகளைச் செய்து வருகிறார் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் மதிய உணவுக்காக தவிசாளர் சபை அலுவலகத்தை விட்டு பொலிஸாரின் உதவியுடன் வெளியேறினார் என்றும் தெரிவிக்கப்பட்டது.