வவுனியா கல்விக்கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.எம்.பி.நடராஜ் தலைமையில் நேற்று (18.03) அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, முன்னாள் உபபீடாதிபதி திரு.தெய்வேந்திரன், வவுனியா தெற்கு உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.ஜனாப் சுபைர், வவுனியா நகரசபை செயலாளர் திரு.சத்தியசீலன்,
முன்னாள் வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.பாலசிங்கம், செட்டிக்குளம் கோட்ட கல்விப்பணிப்பாளர் திரு.யேசுதன் ஆகியோரும், பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓய்வுநிலை அதிபர்கள், ஆசிரியர் மத்திய நிலைய வளவாளர்கள், ஓய்வுநிலை உதவிக்கல்வி பணிப்பாளர்கள், நடுவர்கள், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.எம்.பி.நடராஜ் தனது உரையில்,
வவுனியா கல்விக்கோட்டத்தில் 43 பாடசாலைகளைச்சேர்ந்த 20,620 மாணவர்களும், 1,384 ஆசிரியர்களும் கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், 42 பாடசாலைகள் இன்றைய போட்டியில் கலந்துகொண்டதாகவும், 20 வீதம் அளவிலான மாணவர்கள் பங்களித்துள்ளதாகவும் தெரிவித்ததோடு, வலயக்கல்வி பணிப்பாளர், 42 பாடசாலைகளினதும் அதிபர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பை பாராட்டி நன்றியும் தெரிவித்தார்.
பத்து வருடங்களுக்கு பின்னர், வவுனியா கல்விக்கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


























