வவுனியாவில் சைக்கிள்களுக்கு இரவு நேரத்தில் பயணிக்க கூடிய வகையில் ஒளியை தெறிப்படையச் செய்யும் ஸ்ரிக்கர்களை ஒட்டும் நடவடிக்கையை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய ரீதியில் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேரங்களில் பயணிக்கும் சைக்கிள்களை வீதியால் பயணிக்கும் ஏனைய வாகனங்கள் அடையாளம் காணும் வகையில் ஒளியை தெறிப்படையைச் செய்யும் ஸ்ரிக்கர்களை சைக்கிள்களுக்கு ஓட்டும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக வவுனியா, குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் வைத்து மன்னார் வீதி வழியாக பயணித்த சைக்கிள்களுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி, மற்றும் போக்குவரத்து பொலிஸார் கலந்து கொண்டனர்.







