வவுனியா நெளுக்குளத்தில் விபத்து!!(படங்கள்)

610

வவுனியா நெளுக்குளத்தில் இன்று (09.04) 3 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா நெளுக்குளம் பிரதேசத்திலுள்ள மதுபான நிலையத்தில் மது அருந்திவிட்டு, குடிவெறியில் வீதியைக் கடக்க முற்பட்ட நபர் பொருளாதார அமைச்சிற்கு சொந்தமான வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில் முகத்திலும் கால்களிலும் காயமடைந்த இன் நபர் காயத்தையும் பொருட்படுத்தாமல் தப்பிச் செல்ல முனைந்தபோதும் பொதுமக்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இப் பிரதேசத்தில் மது அருந்துபவர்களால் இரவு வேளைகளில் அதிகமான விபத்துக்கள் நடைபெற்றுவருவதுடன், வீதியால் பயணிப்பவர்களும் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

-பாஸ்கரன் கதீசன்-

1 2 3 4 5 6 8 9