சுமார் 97 புகலிடக் கோரிக்கையாளர்களைச் ஏற்றிச் சென்ற படகு ஒன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்தில் கைக்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ஜேசன் கிளயார் தெரிவித்துள்ளார்.
குறித்த படகில் இருந்து 88 பேர் இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த படகில் உள்ளவர்கள் நேற்று வெள்ளிக்கிழமையே தமக்கு ஆபத்து என உதவி கோரியதாகவும் அதன்படி அவர்களை பாதுகாக்கச் சென்ற அதிகாரிகள் இன்று காலையே அங்கு சென்றதாகவும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த படகில் இருந்திருக்கலாம் என அவர் சந்தேகிக்கின்றார்.
காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் பணியில் கடற்படை கப்பல்களும் விமானங்களும் ஈடுபட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.