அமெரிக்காவில் சாதனைகளால் கலக்கும் 17 வயது இந்திய வம்சாவளி மாணவி!!

557

Indian Student

அமெரிக்காவில் படித்து வரும் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர், பேசும் முறையை வைத்து ஒருவருக்கு பார்கின்சன் நோய் இருக்கிறதா என்பதை கண்டறியும் அப்ளிகேஷனை கண்டுபிடித்துள்ளார்.

வெர்ஜினியா மாநிலத்தில் வசித்து வரும் 17 வயதான பூஜா சந்திரசேகரின் பெற்றோர் பெங்களூரில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். தற்போது இந்த கண்டுபிடிப்பினால் பூஜா சந்திரசேகருக்கு அங்குள்ள பிரபலமான 14 பல்கலைக்கழகங்களிலும் இடம் கிடைத்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், என்னால் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை என்னை சாதிக்கத் தூண்டியது. நான் துவங்கிய என்ஜிஓவுக்காக நான் பார்கின்சன் நோய் மற்றும் மூளை காயம் தொடர்பாக ஆய்வு செய்தேன்.

அந்த அப்ளிகேஷனில் யாராவது 10 முதல் 15 வினாடிகள் பேசினால் அவர்களின் குரலை வைத்து அவர்களுக்கு பார்கின்சன் நோய் உள்ளதாக என்பதை கண்டறிய முடியும்.

அந்த அப்ளிகேஷன் பார்கின்சன் நோயை 96 சதவீதம் துல்லியமாக கண்டுபிடிக்கும். ஹார்வர்டு அல்லது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேரலாம் என்று இருக்கிறேன்.

என் ஆய்வை தொடர்ந்து செய்வேன். கல்லூரி செய்தித்தாள் அல்லது நூலக பத்திரிக்கையில் எழுதுவேன் என்று நம்புகிறேன். இளங்கலை படித்துமுடித்துவிட்டு மருத்துவப் படிப்பு படிக்க விரும்புகிறேன்.

மருத்துவராகி மருத்துவ துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவத்தில் புதியவற்றை கண்டுபிடிக்க வேண்டும். மேலும், தொழில் துவங்குவதில் ஆர்வம் இருப்பதால் எம்.டி. அல்லது எம்.பி.ஏ. படிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.