சிறுமி மீது 5 பேர் வல்லுறவு : அவமானத்தால் சிறுமி தற்கொலை முயற்சி!!

605

Abuse

இந்தியாவின், உத்தர பிரதேசத்தில் சிறுமியொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 14 வயதான குறித்த சிறுமி 5 பேரால் கடந்த 19 ஆம் திகதி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்

மேலும் அச்சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை எண்ணி தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரது உடலின் 70% பகுதி தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் , அவர் தற்போது அபாயமான கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக க் கூறப்படும் 5 பேரும் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் ஒருவர் பராயமடையாதவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.