
ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்தல் தொடர்பாக தெலுங்கு நடிகை நீத்து அகர்வாலை அம்மாநில பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, செம்மரக்கடத்தில் தொடர்புடையவர்களை பொலிசார் கைதுசெய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த மூசா, நாகராஜன், மற்றும் லட்சுமணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேவேளை ஆந்திராவில், செம்மரக்கடத்தலில் தொடர்புடைய மஸ்தான் வலி என்பவரும் கைது செய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட மஸ்தான்வலியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது தெலுங்கு நடிகை நீத்து அகர்வாலுக்கும் செம்மரக்கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.





