வவுனியா தெற்கிலுப்பைக்குளம் பராசக்தி வித்தியாலயமும் கலைமகள் பாலர் பாடசாலையும் இணைத்து நடாத்திய மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் நேற்று 30.04.2015 காலை 9 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.S.சண்முகரத்தினம் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக பிரதேச சபை உறுப்பினர் திரு.R.இராஜசேகர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திருமதி.S.விஜயகாந்தன்(ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர்), திருமதி.V.குலராஜா (P.S.I. இணைப்பாளர் – வலயக் கல்வி அலுவலகம்), அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு.S .சசிகுமார்(சிவில் பாதுகாப்புத் குழுத் தலைவர்), திரு.K.சுதர்சன்(கபில் பிரிண்டர்ஸ்), திரு.S.சிறீதரன்(Photo Max Video and Photo), திரு.T.தனுசன்( தனுசன் Photo and Video) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.








