மூழ்கிய கப்பலில் இருந்த இலங்கையர்களை காணவில்லை..!

543

somaliaசோமாலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்தபோது, கடந்தவாரம் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த 11 கப்பல் பணியாளர்கள் உயிர்தப்பியுள்ளதாக அந்தப் பிராந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடற்கொள்ளையர்களின் பிடியிலுள்ள இன்னொரு மீன்பிடி கப்பலுக்கு இவர்கள் கடைசிநேரத்தில் மாற்றப்பட்டுள்ளதாக கிழக்கு ஆபிரிக்க கடற்பிராந்திய பாதுகாப்புக்கான செயலகத்தின் தலைவர் ஜோன் ஸ்டீட் தெரிவித்தார்.

கப்பலில் இருந்துள்ள 4 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை என்று கூறிய ஜோன் ஸ்டீட், காணாமல்போன 4 பேருமே இலங்கையர்கள் என்றும் கூறினார்.

எல்பேடோ என்ற இந்தக் கப்பல் மூழ்கியபோது அதிலிருந்து வெளிப்பட்ட அவசர உதவி உயிர்காப்பு படகுகள் பல நீண்டதூரம் கடந்து கரையொதுங்கியுள்ளதை ஐரோப்பிய கடற்படையினர் உறுதிசெய்துள்ளனர்.



அந்தப் படகுகள் மூலம் கடற்கொள்ளையர்கள் அல்லது கப்பல் பணியாளர்கள் உயிர்தப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மூழ்கிய எல்படோ வர்த்தகக் கப்பலில் இருந்து 11 பணியாளர்கள் நாய்ஹம்-3 என்ற மீன்பிடிக் கப்பலுக்கு மாற்றப்பட்டநிலையில், ஏற்கனவே 29 பேருடன் பிடித்து வைக்கப்பட்டிருந்த நாய்ஹம்-3 கப்பலும் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக ஜோன் ஸ்டீட் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரையும் விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகவும், பணையம் வைக்கப்பட்டுள்ள சில கப்பல் பணியாளர்களை குடும்பத்தினருடன் பேச கொள்ளையர்கள் அனுமதித்துள்ளதாகவும் கிழக்கு ஆபிரிக்க கடற்பிராந்திய பாதுகாப்புக்கான செயலகத்தின் தலைவர் மேலும் கூறினார்.

(BBC)