வவுனியாவை வந்தடைந்த “தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒற்றுமைப் பயணத்தின்” வீதி உலா!!(படங்கள்)

546

நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் சென்று தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒற்றுமைப் பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணத்தின் வீதி உலா இன்று(09.05) காலை வவுனியா பூவரசன்குளம் பகுதியை வந்தடைந்தது. தொடர்ந்து வவுனியா நகரம் மற்றும் மாங்குளம் பகுதிகளை நோக்கி பயணித்தது.

சக்தி-சிரச-நியூஸ்பெஸ்ட் ஊடக வலையமைப்பு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் இணைந்து இந்த ஒற்றுமைப் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளன.

தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணத்தின் வீதியுலா தலைமன்னாரில் இருந்து நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை அடையாளப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த மாபெரும் வீதியுலா முதல்முறையாகவே இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10 11 012 12 013 13  014 14 015 15