வவுனியா ஈஸ்வரிபுரத்தில் வசிக்கும் இரு பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திரன் இந்திரகுமாரால் ரூபா 70000 பெறுமதியான ஆடுகள் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் ஊடாக 08.05.2015 அன்று வழங்கி வைக்கப்பட்டன.
2009 யுத்தத்தில் செல் வீச்சில் கணவன் முத்துசாமியை இழந்து ஒரு பெண் பிள்ளையுடன் உதவிகள் யாரும் இன்றி வறுமையில் வாழ்ந்த துஸ்யந்திக்கு வாழ்வாதாரத்தை பெருக்குவதற்க்கு ரூபா 32000.00 பெறுமதியான 4 ஆடுகளும்,
கணவன் ரவி புற்றுநோயால் இறந்து விட 3 பெண் பிள்ளைகளுடன் ,உதவிகள் ஏதும் இன்றி வாழ்ந்த புஸ்பகுமாரிக்கு ரூபா 38000.00 பெறுமதியான 5 ஆடுகளும் வழங்கி வைக்கப்பட்டன .
இந்திரனின் இந்த உதவிகளை தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் உட்பட இந்திரனின் அம்மா, மனைவி, பிள்ளைகள் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.
இரு குடும்பங்களும் இந்த வாழ்வாதார உதவிகள் தமக்கு பெரும் உதவி என்றும், தமது பெண் பிள்ளைகளின் படிப்புக்கு பெரிதும் உதவும் என்றும், இதை வழங்கிய புலம் பெயர் எம் உறவு இந்திரனுக்கும், அவரது குடும்ப உறவுகளுக்கும், பெற்று தந்த தமிழ் விருட்சம் கண்ணன் ,ஜெகன் அண்ணாவுக்கும் என்றென்றும் தமது மனமார்ந்த நன்றிகள் என்றார்கள்.











