சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
18 ஆண்டுகளாக இடம்பெற்று வந்த சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட மகிழ்ச்சியை அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சராக வாய்ப்புக்கள் உள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.






