கடந்தவாரம் பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி வேண்டிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-பாஸ்கரன் கதீசன்-






