வவுனியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தினம்!!(படங்கள்)

589

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவால் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நேற்று (18.05) வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

மாலை 3 மணிக்கு பிரஜைகள் குழுவின் தலைவர் கே.தேவராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களான சி.சிவமோகன், ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜ், தமிழ் விரட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார் உட்பட காணாமல்போனோரின் உறவுகள் மற்றும் யுத்த தாக்கத்திற்கு உள்ளானவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

1 02 0032  3 4 5