கடந்தவாரம் பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா நெளுக்குளம் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் இன்று(20.05) காலை 11 மணியளவில் கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிநுட்பக் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி வேண்டி கோஷங்களை எழுப்பியதுடன் பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-பாஸ்கரன் கதீசன்-












